செய்திகள்
மம்தா பானர்ஜி

பவானிபூர் இடைத்தேர்தல் மனுத்தாக்கல்: தேர்தல் கமிஷனில் மம்தா மீது பா.ஜனதா புகார்

Published On 2021-09-14 10:09 GMT   |   Update On 2021-09-14 11:02 GMT
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றார். ஆனால், நந்திகிராம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.

இதனால் பவானிபூர் இடைதேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பிரியங்கா களம் இறங்குகிறார். மம்தா பானர்ஜி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த தகவலை வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை என தேர்தல் கமிஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது.
Tags:    

Similar News