செய்திகள்
கோப்புபடம்

சாக்கடை கால்வாய்களில் சாய கழிவு நீர் - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2021-10-24 04:50 GMT   |   Update On 2021-10-24 04:50 GMT
சுத்திகரிக்காத ரசாயனம் மிக்க அபாயகரமான கழிவுநீரை நொய்யலாறு, சாக்கடை கால்வாய்களில் திறந்து விடுகின்றன.
திருப்பூர்:

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக அளவு ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் சாய ஆலைகள் இரவு பகலாக இயங்கி வருகின்றன.

முறையான சாய ஆலைகள் இயங்கி வரும் நிலையில் வீடுகள், குடோன்களில் ரகசியமாக இயங்கும் சில ஆலைகள் சுத்திகரிக்காத ரசாயனம் மிக்க அபாயகரமான கழிவுநீரை நொய்யலாறு, சாக்கடை கால்வாய்களில் திறந்து விடுகின்றன.

தென்னம்பாளையம் அருகே ஜம்மனை பள்ளம் ஓடையில் சாய ஆலையால் திறந்து விடப்பட்ட சாயக் கழிவுநீர் சிவப்பு நிறத்தில் பாய்ந்தோடியது. நகரின் மத்தியில் உள்ள ஜம்மனை பள்ளம் ஓடையில் பட்டப் பகலிலேயே சாயநீர் பாய்ந்தோடுவது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
எனவே எந்த நிறுவனத்திலிருந்து சாயக் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது என கண்டறிந்து, இயக்கத்தை முடக்க மாசுக் கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News