உள்ளூர் செய்திகள்
பணம் மோசடி

திருநின்றவூரில் 50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சத்தை இழந்த காண்டிராக்டர்

Published On 2022-05-07 08:09 GMT   |   Update On 2022-05-07 08:09 GMT
திருநின்றவூரில் பணம் கீழே விழுந்து இருப்பதாக கூறி ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆவடி:

ஆவடியை அடுத்த திருநின்றவூர் அம்பிகாபுரத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் கட்டிட காண்ட்ராக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று மதியம் திருநின்றவூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றார். அவர் அடகு வைத்த நகை மீட்பதற்காக அவரது கணக்கிலிருந்து ஒரு லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றார்.

அவரது வீட்டின் அருகே செல்லும் வழியில் திருவள்ளூர் சென்னை நெடுஞ்சாலையில் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் பார்த்த போது 4 மர்ம நபர்கள் உங்களுடைய பணம் கீழே விழுந்து இருப்பதாக கூறியுள்ளனர்.

அவரும் உடனே எதிர்ப்புறம் வண்டியை நிறுத்திவிட்டு கீழே கிடந்த ஐம்பது ரூபாய் எடுத்து சென்றுள்ளார். பின்னர் அவரது வீட்டுக்கு சென்று இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் காணவில்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக திரும்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த திருநின்றவூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்து போது அவரை பின் தொடர்ந்து 4 பேர் வந்துததும், அவரது வண்டியில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர் எடுத்து ஓடும் காட்சி அனைத்தும் பதிவாகி இருந்தது, இந்த சிசிடிவி காட்சியை வைத்து 4 மர்ம நபர்களை திருநின்றவூர் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News