லைஃப்ஸ்டைல்
குளிர் காலத்தில் குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாக்கும் வழிகள்

குளிர் காலத்தில் குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாக்கும் வழிகள்

Published On 2019-08-30 03:19 GMT   |   Update On 2019-08-30 03:19 GMT
குளிர், பனிக்காலத்திலிருந்து குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாக்க சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க முடியும்.
குளிர்ந்த வெப்பநிலை குழந்தைகளின் சருமத்தை உலர செய்யும். சருமத்தில் சில வெடிப்புகள் போன்றவையும் காணப்படும். சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் குழந்தைகளின் சருமத்தைக் குளிர் காலத்தில் இருந்து காக்க முடியும்.

குழந்தைகளை நீண்ட நேரமாக குளிக்க வைக்க வேண்டாம். 5 நிமிடத்துக்குள் குளித்து விட்டுவரும்படி ஏற்பாடு செய்யுங்கள். பிறந்த குழந்தைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வைக்கலாம். ஆனால், கால், இடுப்பு, டயாப்பர் உள்ள பகுதிகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். சுடுநீர் இல்லாமல் இளஞ்சூடான நீரில் குளிக்க வைப்பது நல்லது. சூடான நீரில் குளித்தால் சருமம் வறண்டு போகும்.

குளிர் காலத்தில் குழந்தையின் சருமம் உலர்ந்து காணப்படும். ஆகையால், சருமத்துக்குத் தரமான பேபி கிரீம் பயன்படுத்தலாம். 6+ மாத குழந்தைகளுக்கு தேவையான தண்ணீர், ஜூஸ், சூப், பழங்கள் போன்ற நீர்ச்சத்து உணவுகளையும் சரியான அளவில் தர வேண்டும். 0-6 மாத குழந்தைகளுக்கு, தாய்ப்பால் அதிகமாகக் கொடுத்து உடலின் நீர்ச்சத்து அளவை பராமரித்துக்கொள்ள வேண்டும். மீன், நட்ஸ் மற்றும் நட்ஸ் பவுடர், அவகேடோ போன்றவை சருமத்தை காக்கும் உணவுகள்.

அதிக வாசம், அதிக கெமிக்கல்கள் இருந்தால் குழந்தையின் சருமத்தை உலர்தன்மையாக மாற்றும். இதனால் எரிச்சலும் உண்டாகலாம். தரமான லாண்டிரி டிடர்ஜென்ட் பயன்படுத்தி, குழந்தைகளின் துணியை துவைத்தால் இவ்வித பிரச்னைகளிலிருந்து குழந்தைகளைக் காக்கலாம்.

குளிரைத் தாங்க கூடிய கனமான உடைகளை அணிந்து விடுங்கள். ஆனால், குத்தாத, அரிக்காத உடைகளாக இருப்பது நல்லது. முழுக்கை, முழுக்கால் மூடும்படியான ஆடைகளை அணியலாம். காது, தலைக்கு மப்ளர் அணிந்து விடலாம்.

வெப்பநிலையும் குளிர்தன்மையுடன் இருக்க, அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் குழந்தைகளின் நிலையை நினைத்துப் பாருங்கள். அவ்வப்போது டயாப்பர் மாற்றிவிடுங்கள். நீண்ட நேரம் ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டாம். முடிந்த அளவுக்கு குழந்தையின் தொடை, கால், அடி இடுப்பு பகுதிகளை ஈரத்தன்மை அதிகம் இல்லாமல் கவனித்துக் கொள்ளுங்கள். டயாப்பரை மாற்றி, அந்த இடத்தை இளஞ்சூடான நீரில் சுத்தம் செய்த பின்னர் பேபி கிரீம் பயன்படுத்துங்கள்.

பனிக்காலத்தில் குழந்தையின் கன்னங்கள் சிவப்பாக கூடும். உலர்த்தன்மையின் வெளிப்பாடுதான் இந்த பிரச்னை. கன்னங்களில் தடவ, தரமான பேபி லோஷன் பயன்படுத்துங்கள். கன்னங்கள் உலர்ந்து சிவப்பாகும் பிரச்னை தடுக்கப்படும்.

விட்டமின் இ கலந்த எண்ணெயை சருமம் முழுவதும் தடவி, 20 நிமிடங்கள் ஊறவிட்டு இளஞ்சூடான நீரில் குளிக்க வைக்கலாம். வாரம் 1-2 முறை பயன்படுத்தினாலே போதும்.

சில குழந்தைகளுக்கு தலையில் செதில் செதிலாக சருமம் உலர்ந்து காணப்படும். இதை லேசாக ஆலிவ் எண்ணெய் விட்டு தேய்த்தால் நீங்கிவிடும். இது ஒரு பிரச்னையல்ல. இயல்பான ஒன்றுதான். நாளடைவில் சரியாகிவிடும். ஆலிவ் எண்ணெயோ தேங்காய் எண்ணெயோ வைத்துத் தேய்த்து விட்ட பின்னர், பேபி ஷாம்பு போட்டு குளிக்க வைத்து விடுங்கள்.

எப்போதுமே இளஞ்சூடாகவே குழந்தைகளுக்கு நீர் அருந்த கொடுக்கலாம். பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு கொதித்து ஆறவைத்த குடிநீரையே கொடுத்துப் பழகுங்கள். போதுமான அளவு நீர்ச்சத்து குழந்தைகளுக்கு முக்கியம். 
Tags:    

Similar News