ஆன்மிகம்
ஹோமம்

ஹோம குண்டத்தில் பெண்கள் எதையும் போடவே கூடாது என்பதற்கான காரணம்

Published On 2020-11-07 04:30 GMT   |   Update On 2020-11-06 04:53 GMT
உங்கள் வீட்டில் ஹோமம் செய்யும் போது, பெண்கள் ஹோமத்தில் எதையும் போடக்கூடாது. அப்படி செய்தால் ஹோம பலன் இல்லை என்பதை மறவாதீர்கள்.
உங்கள் வீட்டில் ஹோமம் செய்யும் போது, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் ஹோமத்தில் எதையும் போடக்கூடாது. அப்படி செய்தால் ஹோம பலன் இல்லை என்பதை மறவாதீர்கள். ஹோமம் செய்வதற்கு முன்பே, அங்கு உள்ள பொருட்கள் அனைத்தையும் உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் முதலில் தொட்டுவிடவேண்டும்.

அவ்வளவுதான். நேரிடையாக ஹோம குண்டத்தில் பெண்கள் எதையும் போடவே கூடாது. இது மிக முக்கியம். அதேபோல், ஹோமம் செய்தவுடன், அது அறுபதாம், அல்லது என்பதாம் கல்யாணமாக இருந்தாலும் சரியே, அல்லது வேறுவித ஹோமம் செய்தாலும் சரியே, ஹோமம் முடிந்தவுடன், உங்களுக்கு மங்கள ஸ்நானம் இருந்தால், உங்களை உட்காரவைத்து, ஹோமம் செய்த அய்யர்தான் உங்களுக்கு ஜலம் விடவேண்டும்.

அப்போதுதான் உங்களுக்கு பலிக்கும். எந்த காரனத்தைகொண்டும், நமது வீட்டில் உள்ளவர்கள் விட்டால் அது பிரயோசனமில்லை. இந்த குளியலின் போது, பெண், கணவனுக்கு இடது பக்கத்தில் உட்காரவேண்டும். வலது பக்கத்தில் உட்கார்ந்தாள் செல்லாது.
Tags:    

Similar News