ஆன்மிகம்
கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆலயம்

கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா நாளை நடக்கிறது

Published On 2021-02-13 04:44 GMT   |   Update On 2021-02-13 04:44 GMT
திருவட்டார் அருகே கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. சிறப்பு விருந்தினராக குமரி பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை அர்ப்பணம் செய்து அருளுரை வழங்குகிறார்.
திருவட்டார் அருகே கடமலைக்குன்று சேகரம், கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபை புதிய ஆலய அர்ப்பண விழா, 200-வது ஆண்டு நிறைவு விழா, நினைவு தூண் அர்ப்பண விழா, சிறப்பு மலர் வெளியீட்டு விழா, புதிய பணித்தள அடிக்கல் நாட்டு விழா, அருட்பணியாளர் அர்ப்பண விழா, கிராம ஊழிய தொடக்க விழா ஆகிய விழாக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. சேகர ஆயர் ஜார்ஜ் வேததாஸ் தலைமை தாங்குகிறார். திருச்சபை ஆயர் லிபின் ராஜ், உதவி திருப்பணியாளர் ஜெயக்குமார் ஆமோஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக குமரி பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை அர்ப்பணம் செய்து அருளுரை வழங்குகிறார்.

விழாவில் முன்னாள் பேராயர்கள், போதகர்கள், பேராய தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவை முன்னிட்டு வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நற்செய்தி கூட்டம் நடக்கிறது. இதில் நெய்யூர் சேகர ஆயர் ஸ்டேன்லி ராஜ் தேவச்செய்தி அளிக்கிறார்.

17-ந் தேதி சாம்பல் புதன் சிறப்பு ஆராதனையும், 18-ந் தேதி ஐசக் மற்றும் ஐாபி ஐசக் குழுவினரால் சிறப்பு கூடுகையும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை சபை செயலாளர் பால்ராஜ் தலைமையில் சபை குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News