ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சூரிய கிரகணத்தன்று நடைஅடைப்பு

Published On 2019-12-19 04:28 GMT   |   Update On 2019-12-19 04:28 GMT
சூரிய கிரகணத்தன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் காலை 6 மணிக்கு மேல் நடை சாத்தப்பட்டு பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு அன்றைய தினம் புண்ணியாகவாசனம் செய்து பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படும்.
சூரிய கிரகணம் வருகிற 26-ந் தேதி காலை 8.08 மணி முதல் காலை 11.19 மணி வரை நடக்கிறது. எனவே, அன்றைய தினம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு காலை 5 மணிக்கு தனுர் மாதபூஜை மற்றும் உச்சக்கால பூஜை நடைபெறுகிறது.

காலை 6 மணிக்கு மேல் நடை சாத்தப்பட்டு பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு அன்றைய தினம் புண்ணியாகவாசனம் செய்து பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படும். இதுபோல சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான ஆதிமாரியம்மன் கோவிலின் நடையும் காலையில் சாத்தப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படும். இதர உபகோவில்களான மாகாளிக்குடி உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், போஜீஸ்வரர் கோவில் ஆகியவற்றின் நடைகள் மாலை 4 மணிக்கு திறக்கப்படும்.

இந்த தகவலை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News