ஆட்டோமொபைல்
2019 பல்சர் 150 - கோப்புப்படம்

சோதனையில் சிக்கிய புதிய பல்சர் 150

Published On 2019-07-04 11:31 GMT   |   Update On 2019-07-04 11:31 GMT
பஜாஜ் நிறுவனத்தின் 2020 பல்சர் 150 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



2020 பஜாஜ் பல்சர் 150 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படலில்லை. இதன் முக்கிய அப்டேட்டாக பி.எஸ். 6 என்ஜின் இருக்கும் என தெரிகிறது.

பல்சர் 150 மோட்டார்சைக்கிள் பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளாக இருந்து வருகிறது. இந்தியாவில் குறைந்த செயல்திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகமான முதல் மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின் இந்த மோட்டார்சைக்கிள் ஐந்து முக்கிய அப்கிரேடுகளை பெற்று பல்வேறு புதிய வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.



2020 பஜாஜ் பல்சர் 150 மாடலில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. சோதனையில் சிக்கிய மோட்டார்சைக்கிள் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் முன்புற பிரேக் லைன்கள் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரேக் கேலிப்பர்கள் தங்க நிறம் கொண்டிருக்கின்றன. 

சோதனை செய்யப்படும் பல்சர் 150 மாடலில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவைர முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன.

தற்சமயம் விற்பனை செய்யப்படும் பஜாஜ் பலச்சர் 150 மாடலில் ஏர்-கூல்டு 149சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 13.8 பி.ஹெச்.பி. பவர், 13.4 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: PowerDrift
Tags:    

Similar News