செய்திகள்
கோப்புபடம்

சீராக குடிநீர் வழங்காவிட்டால் போராட்டம் - குடிமங்கலம் பெண்கள் அறிவிப்பு

Published On 2021-09-15 06:24 GMT   |   Update On 2021-09-15 06:24 GMT
வேறு நீராதாரங்கள் எதுவும் இல்லாததால், பல கி.மீ., தூரம் வாகனங்களில் சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலையில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்.
உடுமலை:

குடிமங்கலம் ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சி எல்லையில் ஜல்லிபட்டி பிரிவில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இக்குடியிருப்புகளுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலைத்தொட்டி மற்றும் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக குடிநீர் முறையாக வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காலிக்குடத்துடன், வெனசப்பட்டி ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பெண்கள் கூறியதாவது:

மேல்நிலைத்தொட்டி மற்றும் சின்டெக்ஸ் தொட்டி பயன்பாட்டில் இருக்கும் போது வினியோகம் செய்யும் குடிநீரை இருப்பு செய்து பயன்படுத்தி வந்தோம். தற்போது தொட்டிகள் பயன்பாட்டில் இல்லை. தற்போதுள்ள பொதுக்குழாய்க்கும் முறையாக குடிநீர் வழங்குவதில்லை. 

வேறு நீராதாரங்கள் எதுவும் இல்லாததால், பல கி.மீ., தூரம் வாகனங்களில் சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலையில் உள்ளோம். குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகும் என்றனர்.  
Tags:    

Similar News