செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்காவை இரவிலும் சுற்றிப்பார்க்க அனுமதி

Published On 2021-02-23 06:10 GMT   |   Update On 2021-02-23 06:10 GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவை இரவிலும் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் உள்ள மீட்பு மற்றும் மறு வாழ்வு மையத்துக்கு அருகில் ரிசர்வ் காடுகள் உள்ளன.

இந்த காடுகளின் ஒரு பகுதியில் பயணிகள் இரவில் சுற்றிப்பார்க்கும் வகையில் சவாரி தொடங்க வண்டலூர் உயிரியல் பூங்கா திட்டமிட்டுள்ளது.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட்டபோது அங்கு இரவு சவாரி தொடங்குவதற்காக ஒரு கூட்டம் நடை பெற்றது.

அதன்பிறகு 2020-ம் ஆண்டு மற்றொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கூட்டத்தில் இரவு சவாரி ஒரு பொது தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நிதி பெறுவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை மேற்பார்வையிட ஒரு குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டதும் இரவு சவாரி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு சவாரி அமைக்க 2009-ம் ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. சவாரி மண்டலத்துக்கு ரூ.156 கோடியும், பொழுதுபோக்கு மண்டலத்துக்கு ரூ.36 கோடியும் அனுமதிக்கப்பட்டது.

2010-ம் ஆண்டு இரவு சவாரி அமைப்பதற்கான வேலை தொடங்கியது. இதற்காக உயிரியல் பூங்காவில் ஒரு வட்ட வடிவ சாலையை அதிகாரிகள் அமைத்தனர். மான்கள், கரடி, புலிகள், யானைகள் ஆகியவற்றுக்கான அடைப்புகள் கட்டி முடிக்கப்பட்டன.அதன்பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் 2011-ம் ஆண்டு செலவு தொகையை ரூ.82 கோடியாக குறைத்து இரவு சவாரிக்கான மற்றொரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இரவு சவாரி தொடங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News