ஆன்மிகம்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தகாட்சி.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணத்துக்கு அனுமதி இல்லை

Published On 2020-09-02 08:42 GMT   |   Update On 2020-09-02 08:42 GMT
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும் தேங்காய் உடைப்பதற்கு, அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பக்தர்களை கட்டுப்படுத்தும் விதத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு கோடுகள் போடப்பட்டு இருந்தன. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்பு கோவிலுக்குள் பக்தர்கள்அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் உடல் வெப்பநிலை அறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் முக கவசம் அணிந்து வந்தனர்.

கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும் தேங்காய் உடைப்பதற்கு, அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. பஸ் வசதிகள் இல்லாததால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.
Tags:    

Similar News