செய்திகள்
கனிமொழி எம்.பி.யின் டுவிட்டர் பதிவு

ஆதார் அட்டையில் தமிழ் மொழி புறக்கணிப்பு -கனிமொழி எம்பி கண்டனம்

Published On 2020-10-25 10:02 GMT   |   Update On 2020-10-25 10:02 GMT
புதிதாக வழங்கப்படும் ஆதார் அட்டையில் தமிழ் வாசகம் இந்தியில் மாற்றப்பட்டிருப்பது குறித்து திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

திமுக எம்பி கனிமொழி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பழைய ஆதார் மற்றும் புதிய ஆதார் அட்டைகளை ஒப்பிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழியில் எதை வேண்டுமானாலும் ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன. 

ஆதார் அட்டையை புதுப்பிப்போர் மற்றும் புதிய அட்டைகள் பெறுவோருக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில், ‘எனது ஆதார், எனது அடையாளம்’ என்ற வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது.

மாநில உணர்வுகள் இப்படித்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.

இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.
Tags:    

Similar News