உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வணிகர் உதவி சிறப்பு செயலி திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு நன்றி

Published On 2022-05-07 06:47 GMT   |   Update On 2022-05-07 06:47 GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வணிகர் உதவி சிறப்பு செயலி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுதல்களையும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தெரிவித்துக் கொண்டுள்ளது.
சென்னை:

இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சமூக விரோதிகளாலும், ரவுடிகளாலும் வியாபாரிகள் தாக்கப்படுவதை தடுக்க ஒரு சிறப்பு செயலியை உருவாக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5-ந்தேதி நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் வணிகர் உதவி சிறப்பு செயலி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுதல்களையும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News