ஆன்மிகம்
கன்னியாகுமரி முத்தாரம்மன் கோவிலில் காவடி கட்டு விழா

கன்னியாகுமரி முத்தாரம்மன் கோவிலில் காவடி கட்டு விழா

Published On 2021-02-18 06:51 GMT   |   Update On 2021-02-18 06:51 GMT
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் காவடி கட்டுவிழா நடந்தது. இதையொட்டி காலையில் காவடிக்கு அபிஷேகமும், காவடியில் பன்னீர் நிரப்பும் நிகழ்ச்சியும் நடந்தது.
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் காவடி கட்டுவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் காவடிக்கு அபிஷேகமும், காவடியில் பன்னீர் நிரப்பும் நிகழ்ச்சியும் நடந்தது.

பின்னர் இரவில் நடந்த காவடி வீதி உலா நிகழ்ச்சியில், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதிகளில் பவனியாக எடுத்துச் சென்றனர். இந்த பவனி விடிய விடிய நடந்தது. காவடியை வருகிற 20-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.
Tags:    

Similar News