உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை

Published On 2022-04-15 09:58 GMT   |   Update On 2022-04-15 09:58 GMT
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்தது. நேற்று 3-வது நாளாக பரவலாக மழை கொட்டியது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்தது. நேற்று 3-வது நாளாக பரவலாக மழை கொட்டியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்தது.

நேற்று 3-வது நாளாக பரவலாக மழை கொட்டியது. ஈரோட்டில் நேற்று மாலை 6 மணிக்கு மேக மூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணி அளவில் இடி&மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டியது.  தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

இதனால் ரோடுகளில் மழை வெள்ளம பெருக் கெடுத்து ஓடியது. மேலும் ஒரு சில இடங்களில் மின் சாரம் துணடிக்கப்பட்டது. இதனால் இரவு முழுவதும் மக்கள் தூக்கமின்றி தவித்தனர்.

இதே போல் கோபி, நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு பலத்த மழை கொட்டியது. தொடர் ந்து இரவு 11 மணி வரை பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. கூகலூர் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. நள்ளிரவு வரை மின்சாரம் இல்லாத தால் மக்கள் அவதி அடைந்தனர்.

மேலும் கவுந்தப்பாடி, சலங்கபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இரவு  7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து 11 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடி பகுதியில் 86.2 மி.மீ. மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

மேலும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி களில் நேற்று இரவு 7 மணி முதல் சுமார் 1 மணி நேரத் துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் தட்டு தடுமாறி மெல்லமாக  சென்றது.

மேலும் சில வாகனங்கள் செல்ல முடியாமல் ரோட் டோரங்களில் நிறுத்தப் பட்டன. மழை குறைந்த பிறகு வாகனங்கள் சென்றன. மேலும் பர்கூர், தாமரைக் கரை உள்பட மலை கிராமங் களிலும் பரவலாக மழை பெய்தது. பெருந்துறை பகுதியில் இரவு சுமார் 2 மணி நேரம் மழை தூறியது.

இதே போல் டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, பங்களாபுதூர், ஆப்பக்கூடல், அத்தாணி உள்பட பல பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து விடிய விடிய மழை தூறி கொண்டே இருந்தது.

மேலும் கொடுமுடி, பவானி, சித்தோடு, சென்னி மலை மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இரவு குளிர்ந்த காற்று வீசியது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட் டரில் வருமாறு: ஈரோடு-14, பெருந்துறை-18, பவானி-31, கோபி-11.2, சத்தி-6, பவானிசாகர்-12.6, தாளவாடி-4.5, நம்பியூர்-24, சென்னிமலை-5, கவுந்தப்பாடி-86.2, அம்மாபேட்டை-11, கொடிவேரி-24, குண்டேரிபள்ளம்-28.8, வரட்டுபள்ளம்-8.
Tags:    

Similar News