செய்திகள்
மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க அனுமதி- மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல்

Published On 2021-01-10 08:44 GMT   |   Update On 2021-01-10 08:44 GMT
கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறந்து கொள்ளலாம் என்று மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஏராளமான மலை வாசஸ்தலங்களும், கடற்கரை நகரங்களும் இருக்கின்றன. இங்கு பல ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் உள்ளன.

கேரள ஆயுர்வேத சிகிச்சை மையங்களில் பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளா வந்து பல நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்று செல்வார்கள்.

இதுபோல வெளி மாநிலங்களில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளா செல்வார்கள்.

கொரோனா பிரச்சினைக்கு பிறகு கேரளாவில் உள்ள அனைத்து ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் மற்றும் ஸ்பாக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே இம்மையங்களை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஆயுர்வேத சிகிச்சை மையங்களை நடத்தி வந்தோர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதனை பரிசீலித்த அரசு, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இதுபற்றி மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

கேரளாவில் சுற்றுலா துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகள் விலக்கி கொள்ளப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News