ஆன்மிகம்
நகராஜபுரம் நாக மாரியம்மன்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்

நாகமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2021-09-11 06:11 GMT   |   Update On 2021-09-11 06:11 GMT
விநாயகர் வழிபாடு, கோமாதா பூஜை, எம்.ஜி.ஆர். நகர் புற்றுக்கண் நாகர்கோவிலில் இருந்து முளைப்பாரி புற்றுமண், விமான கோபுர கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டது.
கோவை வேடபட்டி நாகராஜபுரத்தில் நாகமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆதி கணபதி, பாலமுருகன் பச்சை நாயகி அம்மன் உடனுறை பட்டீஸ்வரர், செல்வவிநாயகர், கன்னிமார், விஷ்ணு துர்க் கை, முனியப்பன், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் மற்றும் நவக்கிரகங்கள் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. இதையடுத்து கும்பாபி ஷேக விழா முனியப்பன் அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, கோமாதா பூஜை, எம்.ஜி.ஆர். நகர் புற்றுக்கண் நாகர்கோவிலில் இருந்து முளைப்பாரி புற்றுமண், விமான கோபுர கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டது. இதையடுத்து விமான கோபுர மூல கலசங்கள் நிறுவுதல், நாக மாரியம்மன் சிலை நிறுவுதல், காப்பு அணிவித்தல், நாடியின் வழியாக இறையாற்றல் சக்திகளை தெய்வத்துக்கு எழுந்தருளச் செய்தல், வேள்வி நிறைவு வழிபாடு, திருமுறை விண்ணப்பம், சாற்றுமுறை வழிபாடு நடந்தது.

இதையடுத்து வேள்விச் சாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் குடங்களை ஏந்தி கோவிலை வலம் வந்தனர். காலை 9.15 மணிக்கு விமானம் மற்றும் மூலவர் சன்னதிகளுக்கு கும்பாபிஷேக விழா நடை பெற்றது. இதை தர்மராஜ சுவாமிகள் நடத்தி வைத்தார். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என்று கோஷமிட்டனர். அதை தொடர்ந்து நாகமாரியம்மனுக்கு மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News