செய்திகள்

குமரி மாவட்டத்தில் இன்று திடீர் சாரல் மழை

Published On 2018-12-29 14:28 GMT   |   Update On 2018-12-29 14:28 GMT
குமரி மாவட்டத்தில் இன்று காலை வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. திடீரென பல பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரவில் பனி பொழிவும், பகலில் கடும் வெயிலும் கொளுத்தியது. இன்று காலையில் திடீரென சீதோஷ்ணம் மாறியது. காலை முதல் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பகல் 10.30 மணிக்கு திடீரென நாகர்கோவில் நகரின் பல பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது.

இது மாவட்டம் முழுவதும் காணப்பட்டது. கன்னியாகுமரி, கொட்டாரம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தோவாளை, தக்கலை, திருவட்டார், குலசேகரம், குழித்துறை என மாவட்டத்தின் பெரும்பாலான நகரங்களில் மழை பெய்தது. பகல் 1 மணிக்கு பின்னரும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் நகரின் சீதோஷ்ணம் இதமாக இருந்தது.

Tags:    

Similar News