செய்திகள்
கொரோனா பரிசோதனை

வண்ணார்பேட்டை டெப்போவில் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-24 10:17 GMT   |   Update On 2021-04-24 10:17 GMT
அனைத்து ஊழியர்களுக்கும் இன்று சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. 150 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் தினசரி தொற்று 400-க்கும் மேல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மாவட்டம் முழுவதும் 80-க்கு மேற்பட்ட முகாம்களில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து அங்கு பணியாற்றும் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசிகள் போட சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு 70 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்நிலையில் இன்று 2-ம் கட்டமாக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் இன்று சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. 150 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பிற்பகல் வரை 40 பேருக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்த பணிகளை தச்சநல்லூர் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ பார்வையிட்டார்.

Tags:    

Similar News