ஆன்மிகம்
பிரத்யங்கிரா தேவி கோவிலில் சாகம்பரி அலங்கார சிறப்பு வழிபாடு

பிரத்யங்கிரா தேவி கோவிலில் சாகம்பரி அலங்கார சிறப்பு வழிபாடு

Published On 2021-10-20 05:27 GMT   |   Update On 2021-10-20 05:27 GMT
திருமணத்தடை, புத்திர பாக்கியதடை ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் விலக பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் இங்கு வந்து பிரத்தியங்கிராதேவியை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
திருவிசநல்லூர் கிராமத்தில் பிரதியங்கிராதேவி கோவில் உள்ளது. இங்கு 5 முகத்துடன் 12 அடி உயரத்தில் பஞ்சமுக மகாமங்கல பிரத்தியங்கிரா தேவி அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் 12 வாரம் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பல்வேறு வகையான காய்கறிகளால் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பிரத்தியங்கிராதேவியை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

திருமணத்தடை, புத்திர பாக்கியதடை ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் விலக பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் இங்கு வந்து பிரத்தியங்கிராதேவியை தரிசனம் செய்து செல்கிறார்கள். நேற்று ஐப்பசி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி பிரதியங்கிராதேவிக்கு பல்வேறு காய்கறிகளைக் கொண்டு சாகம்பரி அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அறங்காவலர் கணேஷ்குமார் குருக்கள், ஆலயநிர்வாகி நந்தினி கணேஷ் குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News