செய்திகள்
கோப்புப்படம்

ஊரடங்கில் தளர்வு- பேருந்து சேவைக்கு பரிந்துரைத்த மருத்துவ குழு

Published On 2021-06-19 08:04 GMT   |   Update On 2021-06-19 08:04 GMT
கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்களை திறக்கவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை: 

சென்னை தலைமை செயலகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையில் மருத்துவ குழு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 



இந்த ஆலோசனையில் தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ குழுவினர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்களை திறக்கவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
Tags:    

Similar News