செய்திகள்
விக்கிரமராஜா

சில்லரை வணிகத்துக்கு தடை விதிக்கக்கூடாது- விக்கிரமராஜா வேண்டுகோள்

Published On 2021-04-09 04:41 GMT   |   Update On 2021-04-09 04:41 GMT
வணிகர்கள் மீது அதிரடி கட்டுப்பாடுகளை திணிப்பது என்பது நியாயமற்றது. இதனை அரசு அதிகாரிகள் சீர்தூக்கி பார்த்திட வேண்டும்.
சென்னை: 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 10-ந் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி அங்காடி செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு சென்னை கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், சில்லரை வணிகர்களின் வாழ்வு கேள்விக்குறியானது. ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பின்னர்தான் படிப்படியாக கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டு இப்போது தான் நிலைமை சீராகி வருகிறது. 

அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகள், அனைத்து குடிமக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது மட்டுமன்றி, அதனால் நாட்டின் பொருளாதாரமும் சீரழிக்கப்படுகிறது. வணிகர்கள் மீது அதிரடி கட்டுப்பாடுகளை திணிப்பது என்பது நியாயமற்றது. இதனை அரசு அதிகாரிகள் சீர்தூக்கி பார்த்திட வேண்டும். 

எனவே சில்லரை வணிகத்தில் விதிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுழற்சி முறையில் வணிகம் நடைபெற்று, வணிகர்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News