செய்திகள்
சித்தரிப்பு படம்

ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை

Published On 2020-01-16 10:40 GMT   |   Update On 2020-01-16 10:40 GMT
ராஜஸ்தானில் முதல் முறையாக அரசு மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் ராஜசமாண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு இளைஞர் மிகவும் ஆபத்தான நிலையில் சுவாமி மேன் சிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை தேறவில்லை. மேலும் மோசமடைந்து மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் அனுமதி பெற்றனர். 

உறவினர்கள் ஒப்புதல் கொடுத்ததும், மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. நேற்று இரவு, அந்த மருத்துவமனையிலிருந்த ஒரு ஆண் நோயாளிக்கு அவரது இதயமும், இரண்டு சிறுநீரகங்கள் ஆண் மற்றும் பெண் நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. அவரது நுரையீரல் நிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதன்மூலம் 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 



‘உறுப்புகள் பொருத்தப்பட்ட நோயாளிகள் அடுத்த 72 மணிநேரங்களுக்கு ஐ.சி.யு.வில் கண்காணிப்பில் இருப்பார்கள், அதைத் தொடர்ந்து அவர்கள் பொது வார்டுகளுக்கு மாற்றப்படுவார்கள்’, என மருத்துவர்கள் தெரிவித்தனர்

இந்நிகழ்வு குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெகோல்ட் ‘ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங்  அரசு மருத்துவமனையில் முதன்முதலில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. மாற்று உறுப்புகள் பொருத்தப்பட்ட நோயாளிகள் விரைவில் உடல்நலம் பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன்’ என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 
Tags:    

Similar News