லைஃப்ஸ்டைல்
தக்காளி வெள்ளரிக்காய் ஜூஸ்

வைட்டமின் நிறைந்த தக்காளி வெள்ளரிக்காய் ஜூஸ்

Published On 2020-06-23 06:05 GMT   |   Update On 2020-06-23 06:05 GMT
தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று இவை இரண்டையும் வைத்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

பழுத்த தக்காளி - 3 கப்
வெள்ளரி - 1/2 கப்
கிராம்பு - 1
தயிர் - 1/4 கப்
புதினா இலைகள் - 10
டிஸ்டீவியா (தேன் புல்) - 1/4 தேக்கரண்
கல் உப்பு - 1/4 தேக்கரண்டி
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு



செய்முறை:

தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தக்காளி, வெள்ளரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

அடுத்து அதில் தயிர், ஸ்டீவியா மற்றும் உப்பைச் சேர்த்து மென்மையாகும் வரை நன்கு அரைக்கவும்.

அடுத்து அதில் ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் மற்றும் புதினா சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி பரிமாறவும்.

சத்தான சுவையான தக்காளி வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடி

கலந்த கலவையை அதில் ஊற்றி பரிமாறவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News