செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரெயில்

Published On 2021-06-08 06:58 GMT   |   Update On 2021-06-08 06:58 GMT
திருப்பூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
திருப்பூர்

கோவை - ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் இன்று  முதல், இயக்கப்படுகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமைதோறும்,கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு,கரூர், திருச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. 

கோவையில் இரவு 7:45க்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6:15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். அன்று இரவு 7 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு கோவை வந்தடையும். கடந்தாண்டு ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட இந்த ரெயில் சேவை துவங்கப்படாமல் இருந்தது.இந்தநிலையில் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு நடக்கிறது.
Tags:    

Similar News