செய்திகள்
பண மோசடி

திருப்பரங்குன்றத்தில் கவரிங் நகைகளை அடகுவைத்து ரூ.15 லட்சம் மோசடி - மேலாளர்- ஊழியர்கள் மீது வழக்கு

Published On 2019-09-10 10:06 GMT   |   Update On 2019-09-10 10:06 GMT
தனியார் நிதிநிறுவனத்தில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ. 15 லட்சம் மோசடி செய்த மேலாளர், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை:

மதுரையில் பிரபல நிதிநிறுவனத்தின் கோட்ட உதவி மேலாளர் வேல்முருகன், திருநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் எங்கள் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக தத்தனேரியை சேர்ந்த சந்தனபாண்டி என்பவர் பணியில் இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இந்த கிளையின் வரவு- செலவு கணக்குளை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

திருப்பரங்குன்றம் கிளை மேலாளர் சந்தனபாண்டி வாடிக்கையாளர் ஒருவரின் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தி, கவரிங் நகைகளை அடகு வைத்து நிறுவனத்தின் பணம் ரூ. 14 லட்சத்து 74 ஆயிரத்தை மோசடி செய்துள்ளார்.

கிளையில் பணிபுரிந்த ஊழியர்கள் காமராஜ், சூர்ய கலா, சுரேந்திரன், வெங்க டேஷ்பாபு, சரவணன் ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

புகாரின் அடிப்படையில் திருநகர் போலீசார் தனியார் நிதிநிறுவன கிளை மேலாளர், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News