உள்ளூர் செய்திகள்
.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.93.88 லட்சத்துக்கு வர்த்தகம்

Published On 2022-04-16 08:08 GMT   |   Update On 2022-04-16 08:08 GMT
சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.93.88 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

இதில் அருகில் உள்ள பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் கரூர் ஒன்றிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 15.57 குவிண்டால் எடை கொண்ட 5 ஆயிரத்து 87தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.31.49 க்கும், குறைந்த விலையாக ரூ.26.50க்கும், சராசரி விலையாக ரூ.30.15க்கும் என்று ரூ46ஆயிரத்து 822க்கு விற்பனை ஆனது.

அதேபோல் 346.07 குவிண்டால் எடை கொண்ட 715மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.89.69க்கும், குறைந்த விலையாக ரூ.86.59க்கும், சராசரி விலையாக ரூ.88.99க்கும் மற்றும் இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.88.99க்கும், குறைந்த விலையாக ரூ.78.15க்கும், சராசரி விலையாக ரூ.85.99க்கும் என்று ரூ.30 லட்சத்து 5ஆயிரத்து 187க்கு விற்பனை ஆனது.

394.20குவிண்டால் எடை கொண்ட 527மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.132.49க்கும், குறைந்த விலையாக ரூ.115.69க்கும், சராசரி விலையாக ரூ.121.99க்கும் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.125.09க்கும், குறைந்த விலையாக ரூ.116.99க்கும், சராசரி விலையாக ரூ.121.99க்கும் மற்றும் வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ 117.99க்கும், குறைந்த விலையாக ரூ 117.99க்கும், சராசரியாக ரூ 117.99க்கும் என்று ரூ.46 லட்சத்து 62ஆயிரத்து 774க்கும் விற்பனை ஆனது.

அதேபோல 260Ñ குவிண்டால் எடை கொண்ட 755 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலை காய் அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.629க்கும் குறைந்த விலையாக ரூ.62க்கும் சராசரி விலையாக 66.19 க்கும் என ரூ16 லட்சத்து 74 ஆயிரத்து 404க்கு ஏலம் போனது. 

தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவை அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மொத்தமாக ரூ.93லட்சத்து 88 ஆயிரத்து 187க்கு விற்பனை ஆனது.
Tags:    

Similar News