உள்ளூர் செய்திகள்
பயிற்சி முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

படலையார்குளம் பஞ்சாயத்தில் வாழை நாரில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்

Published On 2022-05-05 10:22 GMT   |   Update On 2022-05-05 10:22 GMT
படலையார்குளம் பஞ்சாயத்தில் வாழை நாரில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது.
ஏர்வாடி:

படலையார்குளம் பஞ்சாயத்து பகுதியில் அதிக அளவில் மலை ஏத்தன் வகை வாழை ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்து வரும் மலை ஏத்தன் வாழைக்காய் கேரளாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் சிப்ஸ், வாழைக்காய் பவுடர் என பல வகைகளில் மதிப்பு கூட்டப்பட்டு சந்தைபடுத்தப்படுகிறது.

இந்நிலையில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வாழை நாரில் இருந்து கைவினை பொருட்களை தயார் செய்து அதனை மதிப்பு கூட்டுதல் செய்யும் பயிற்சி முகாமை நடத்தினர். இதில் பஞ்சாயத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். சிறிய வகையான பேனா ஸ்டாண்ட், பூக்கூடை, பாக்கூடை போன்ற வீட்டிற்கு தேவையான கைவினை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இவ்வகையான பொருட்கள் கலை நயத்துடன் அழகாக இருப்பதுடன் ரசாயன கலப்பின்றி தயாரிக்கப்படுகிறது. இப்பகுதி பெண்கள் தங்கள் வாழ்வாதாரமாக பீடி சுற்றும் தொழில் செய்து வரும் நிலையில் இவ்வகையான பயிற்சி முகாம் நல்ல வருமானத்தையும் மனநிறைவையும் தருகிறது என தெரிவித்தனர்.

பஞ்சாயத்து தலைவர் என்ஜினியர் முருகன் தலைமையில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை விரிவாக்கம் துணை இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள், பயனாளிகள், ஊராட்சி செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பஞ்சாயத்துதலைவர் என்ஜினியர் முருகன் கூறுகையில், பஞ்சாயத்தை தன்னிறைவு பெற்ற பஞ்சாயத்தாக மாற்ற தீவிரமாக உைழத்து வருகிறேன். இப்பகுதி பெண்கள் சுயமாக தொழில் செய்து வருமானத்தை ஈட்டுவதற்கு இதுபோன்ற பல்வேறு பயிற்சி முகாம் அடிக்கடி நடத்தப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News