லைஃப்ஸ்டைல்
பாசிப்பருப்பு போண்டா

மாலை நேர ஸ்நாக்ஸ்- பாசிப்பருப்பு போண்டா

Published On 2021-09-21 09:12 GMT   |   Update On 2021-09-21 09:12 GMT
மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பாசிப்பருப்பு போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :  

பாசிப்பருப்பு - 1 கப்,
துருவிய சுரைக்காய் - அரை கப்,
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4  
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:  


ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள்.

அதனுடன் துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், கொத்தமல்லித்தழை சேருங்கள்.

சுரைக்காயை நன்கு பிழிந்து நீரை எடுத்து விட்டு பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சூப்பரான பாசிப்பருப்பு போண்டா ரெடி.
Tags:    

Similar News