செய்திகள்
சீமான்

தேர்தலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார்- சீமான் குற்றச்சாட்டு

Published On 2020-11-02 07:44 GMT   |   Update On 2020-11-02 07:44 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார்.

நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகள் வாங்கியது குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:

விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடம் கிடைக்கும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார்.

மக்கள் பிரச்சனைக்கு பாஜக வராது. ஏனெனில் மக்களின் பிரச்சனையே பாஜகதான்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News