செய்திகள்
வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்த காட்சி.

வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

Published On 2020-01-09 16:28 GMT   |   Update On 2020-01-09 16:28 GMT
வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திடீர் ஆய்வு செய்தார்.

வாலாஜா:

வாலாஜாபேட்டையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து பலதரப்பு மக்கள் சிகிச்சை பெருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்கள் எல்லாம் இங்குதான் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும்.

மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையை நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திடீர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் அவசர பிரிவு, மகப்பேறு பிரிவு, பிரசவ வார்டு, ஆண்கள் பெண்கள் நோயாளி பிரிவு, ஸ்கேன் பிரிவு, புறநோயாளி பிரிவு, சித்தா என பல்வேறு பிரிவுகளை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் பற்றாக்குறையும் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவமனை அமைந்துள்ளதால் நோயாளிகள் சாலையை கடக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதற்காக சுரங்கப்பாதை அமைக்க ஜெகத்ரட்சகன் எம்.பி., தொகுதி நிதியிலிருந்து ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க செய்கிறேன் என கலெக்டர் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட சுகாதார இணை இயக்குனர் யாஸ்மின், வாலாஜா மருத்துவமனை கண்காணிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News