செய்திகள்
பார்போரா கிரெஜ்சிகோவா

பிரெஞ்சு ஓபன் - கடும் போராட்டத்துக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கிரெஜ்சிகோவா

Published On 2021-06-10 21:51 GMT   |   Update On 2021-06-10 21:51 GMT
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடந்து வருகின்றன. தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

நேற்றிரவு நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி ஆகியோர் மோதினர்.

போட்டியின் ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டில் 5-5 என்ற கணக்கில் போட்டி ‘டை’ ஆகி இருந்தது. அதன்பின், முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கிரெஜ்சிகோவா கைப்பற்றினார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட சக்காரி இரண்டாவது செட்டை அதிரடியாக ஆடி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் இரு வீராங்கனைகளும் முழு திறமையை வெளிப்படுத்தினர்

ஒரு கட்டத்தில் 7-7 என்ற கணக்கில் போட்டி ‘டை’ ஆகி விறுவிறுப்பு ஏற்படுத்தியது. ஆனாலும், கிரெஜ்சிகோவா கடும் போராட்டத்துக்கு பிறகு 3வது செட்டை தன்வசப்படுத்தினார்.

இறுதியில், கிரெஜ்சிகோவா 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா மற்றும் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா ஆகியோர் மோதுகின்றனர்.
Tags:    

Similar News