உள்ளூர் செய்திகள்
இந்து முன்னணி கூட்டத்தில் திரைப்பட நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசினார்.

இந்து பண்பாட்டை அழிக்கும் நோக்கத்துடன் மடாதிபதிகளை தி.மு.க அரசு மிரட்டி வருகிறது - இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

Published On 2022-05-05 09:48 GMT   |   Update On 2022-05-05 09:48 GMT
இந்து பண்பாட்டை அழிக்கும் நோக்கத்துடன் மடாதிபதிகளை தி.மு.க அரசு மிரட்டி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தரங்கம்பாடி:

இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராஜ்குமார் தலைமை தாங்கினர். பாலாஜி, சீர்காழி சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணேஷ் வரவேற்றார். ஆசியுரை ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கம் பண்டார சன்னதி, சிறப்புஅழைப்பாளர்கள் திரைப்பட நடிகரும், சண்டை மாஸ்டருமான கனல் கண்ணன் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை திமுக அரசு இடித்துள்ளது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களுடைய ஆட்சி நடப்பது போல் மனப்பான்மையில் செயல்பட்டு வருகின்றனர். பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை இந்துக்கள் பண்பாட்டை அழிக்கும் நோக்கில் தமிழக அரசு தடை செய்துள்ளது. திமுக அரசு மடாதிபதிகளை மிரட்டி வருகிறது.இந்துக்களின் கலாச்சாரத்தை உடைக்க வெளிநாடுகளில் இருந்தும் சதி நடைபெறுகிறது என கூறினார்.

பா.ஜ கட்சியின் மாவட்ட செயலாளர் அகோரம், நாஞ்சில் பாலு, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நகர செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News