ஆட்டோ டிப்ஸ்
ஏத்தர் கிரிட்

இலவச சார்ஜிங் வேலிடிட்டியை நீட்டித்த ஏத்தர் எனர்ஜி

Published On 2021-12-21 09:08 GMT   |   Update On 2021-12-21 09:08 GMT
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்ளுக்கு வழங்கி வந்த இலவச சார்ஜிங் சேவை வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.


இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வது மட்டுமின்றி ஏத்தர் கிரிட் பெயரில் பொது சார்ஜிங் மையங்களை ஏத்தர் எனர்ஜி இயக்கி வருகிறது. 

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாட்டின் 200 கிரிட் மையங்களில் இலவச சார்ஜிங் வசதியை அறிவித்தது. இந்த நிறுவனம் விற்பனை செய்த ஏத்தர் 450 மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் மாடல்களுக்கு இலவச சார்ஜிங்கை அனைத்து பொது சார்ஜிங் மையங்களிலும் வழங்கி வருகிறது. முன்னதாக இலவச சார்ஜிங் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்படும் என ஏத்தர் எனர்ஜி அறிவித்து இருந்தது. 



தற்போது இலவச சார்ஜிங் அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படும் என ஏத்தர் எனர்ஜி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. 
Tags:    

Similar News