உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

காயல்பட்டினம் நகராட்சியில் வார்டு வரையறை குழப்பத்தை தீர்க்க கோரிக்கை

Published On 2022-01-11 09:07 GMT   |   Update On 2022-01-11 09:07 GMT
காயல்பட்டினம் நகராட்சியில் வார்டு வரையறை குழப்பத்தை தீர்க்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறுமுகநேரி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் காயல்பட்டினம் கிளை ஊழியர் கூட்டம் நகர தலைவர் முகமது ஹஸன் தலைமையில் நடந்தது. 

முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது அபூபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில்  அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காயல்பட்டினம் நகராட்சியில் வார்டு வரையறை குழப்பங்களை சீர்செய்து பாரம்பரிய பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும். 

மேலும் தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடமும் இதே கோரிக்கையை முன் வைக்கிறோம்.

காயல்பட்டினம் நகராட்சி யில் முஸ்லிம் லீக் போட்டியிட 6 வார்டுகளை தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நகர்மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக்கின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல ஆர்வலர்கள், சமுதாய மக்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News