ஆட்டோமொபைல்
டாடா அல்ட்ரோஸ்

ஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்

Published On 2019-10-13 08:14 GMT   |   Update On 2019-10-13 08:14 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் ஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் ஐரோப்பாவின் பெலாரஸ் பகுதியில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் கார் ஐரோப்பிய நம்பர் பிளேட் கொண்டிருக்கிறது. இது பெரும்பாலும் வணிக விளம்பரத்திற்காக படப்பிடிப்பின் இடைவேளையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

காரின் முன்புறம் பெரிய லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டிலும் மல்டி-லேயர் லேஅவுட் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் இம்பேக்ட் 2.0 தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாடா நிறுவனத்தின் ஹேரியர் காரும் இதே தளத்தில் வடிவமைக்கப்பட்டது.

அல்ட்ரோஸ் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட 45எக்ஸ் கான்செப்ட் மாடல் ஆகும். அல்ட்ரோஸ் காரின் மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்ப்லிட் ரூஃப் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்புற கதவோரத்தில் பில்லர் மவுன்ட் செய்யப்பட்ட கைப்பிடிகள், பிரத்யேக கிளாஸ்ஹவுஸ் காணப்படுகிறது.



அல்ட்ரோஸ் காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. அல்ட்ரோஸ் காரில் கீலெஸ் என்ட்ரி மற்றும் கோ, 16 இன்ச் ரிம்கள், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.

இதன் டேஷ்போர்டு வடிவைப்பு ஹேரியர் மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் ஸ்பீடோமீட்டர், பெரிய மல்டி-இன்ஃபோ-டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் ஹேரியர் மாடலில் உள்ளதை விட சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், இதன் யூசர் இன்டர்ஃபேசில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது.

புகைப்படம் நன்றி: Team BHP
Tags:    

Similar News