செய்திகள்
மோனி‌ஷா - ஜோஸ்பின்

புதுச்சேரியில் ஓட்டுப்போட்ட முதல் தலைமுறை வாக்காளர்கள் கருத்து

Published On 2021-04-07 02:53 GMT   |   Update On 2021-04-07 02:53 GMT
முதல் முறை வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன் என்று புதுவையை சேர்ந்த ஜோஸ்பின் கூறினார்.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான புதிய தலைமுறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை புதிதாக பதிவு செய்தனர். அவர்களில் ஒரு சிலர் கூறிய கருத்துகளை பற்றி பார்ப்போம்.

புதுச்சேரி வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மோனி‌ஷா:-

வாக்களிக்க செல்வதற்கு முன்பாக ஒருவித சந்தோ‌‌ஷமும், எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற பயமும் இருந்தது. வாக்குச்சாவடிக்கு சென்ற உடன் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று விளக்கி கூறினர். நான் எனது ஜனநாயக கடமையை முதல் முறையாக ஆற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

புதிய தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும். வாக்களிப்பது என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே நல்ல வாழ்க்கை வாழ, நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதுவையை சேர்ந்த ஜோஸ்பின்:-

முதல் முறை வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். வாக்குச்சாவடியின் உள்ளே சென்ற உடன் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருந்தது. அங்கிருந்த ஊழியர்கள் வழிகாட்டினர். அதன்படி என்னால் எளிமையாக வாக்களிக்க முடிந்தது.

தற்போதைய காலகட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பை பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. சுற்றுச்சூழலும் தூய்மை இன்றியே காணப்படுகிறது. முந்தைய காலகட்டத்தை காட்டிலும் தற்போது அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைத்துவிட்டால் போராட்டம் தேவை இல்லை. அப்படி ஒருசூழ்நிலை ஏற்பட வேண்டும்.

இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News