செய்திகள்
கூடலூர் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிடப்பதை காணலாம்

20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து- டிரைவர்கள் உயிர் தப்பினர்

Published On 2020-09-19 10:13 GMT   |   Update On 2020-09-19 10:13 GMT
கூடலூர்-கேரள மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் டிரைவர்கள் உயிர் தப்பினர்.
கூடலூர்:

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர், கோட்டயம் மற்றும் பாலக்காடு உள்பட பல மாவட்டங்களுக்கு சாலை செல்கிறது. இதில் கூடலூரில் இருந்து வழிக்கடவு வரை மலைப்பாதையாக உள்ளது. இதுதவிர கேரள மாநில மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து அதிகளவு உள்ளது. இந்த நிலையில் எர்ணாகுளம் பகுதியில் இருந்து சரக்கு லாரி ஒன்று கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கீழ் நாடுகாணி பகுதியில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தொடர்ந்து லாரிக்குள் இருந்த டிரைவர்கள் சிஜோ, வினில் ஆகியோர் பயத்தில் கூச்சலிட்டனர்.

இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் லாரிக்குள் சிக்கியிருந்த சிஜோ, வினில் ஆகியோரை மீட்டனர். இதனிடையே தேவாலா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாக டிரைவர் சிஜோ தெரிவித்தார்.

இதனிடையே பள்ளத்தில் லாரி விழுந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் லேசான காயங்களுடன் டிரைவர்கள் உயிர் தப்பியதால் தேவாலா போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, மலைப் பாதையில் வாகனங்களை இயக்கும்போது டிரைவர்கள் கவனமுடன் வரவேண்டும். மேலும் தூக்க கலக்கத்தில் வாகனங்களை இயக்க கூடாது. அவ்வாறு ஓய்வெடுக்க விரும்பினால் மலைப்பாதை தொடங்குவதற்கு முன்பாக உள்ள பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வு எடுத்த பிறகு இயக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News