செய்திகள்
பாயிண்ட் எடுத்த மகிழ்ச்சியில் பெங்கால் வாரியர்ஸ் வீரர்

புரோ கபடி லீக்: அரியானாவை தோற்கடித்தது பெங்கால் வாரியர்ஸ் அணி

Published On 2019-09-19 15:56 GMT   |   Update On 2019-09-19 15:56 GMT
புரோ கபடி லீக் தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 48 -36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
புனே:

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெங்கால் வாரியர்ஸ் அணி அதிரடியாக ஆடியது. இதனால் அந்த அணி முதல் பாதியின் முடிவில் 30 - 14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் பெங்கால் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் அரியானா அணியினரின் ஆட்டம் எடுபடவில்லை.

இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 48 -36 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

17-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. 16-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா ஸ்டீலர்ஸ் அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும்.
Tags:    

Similar News