செய்திகள்
தங்கம்

தங்கம் விலை ரூ.152 குறைந்தது

Published On 2021-10-11 05:29 GMT   |   Update On 2021-10-11 05:29 GMT
கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னை:

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது.

கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆரபணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,419க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.152 குறைந்து ரூ.35 ஆயிரத்து 352-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.65.80-க்கும், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.100 குறைந்து ரூ.65 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News