செய்திகள்
முற்றுகை

கொடுமுடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

Published On 2019-09-04 16:23 GMT   |   Update On 2019-09-04 16:23 GMT
4 மாதமாக தண்ணீர் வராததால் கொடுமுடி யூனியன் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
கொடுமுடி:

கொடுமுடி யூனியனுக்குட்பட்டது அஞ்சூர் கிராமம் முத்துக் கவுண்டன் பாளையம் இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடி தண்ணீர் கோரி மனு கொடுத்தனர். 

மனுவில் தங்கள் பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை தொட்டி மூலம் பத்து தெருக்குழாய்கள் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பிட்டு வந்ததாகவும் கடந்த 4 மாதங்களாக 10 குழாய்களிலும் தன்ணீர் வருவதில்லை என்றும் இது குறித்து பஞ்சாயத்து கிளர்க்கிடம் பலமுறை நேரில் புகார் கோரியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் இது விசயத்தில் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தனர்.

மேலும் இது குறித்து பெண்கள் கூறும்போது, தண்ணீர் இல்லாததால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வருகிறோம். இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் கொடுத்துள்ளதாக கூறினார்கள்.
Tags:    

Similar News