செய்திகள்
வாழைத்தார்

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

Published On 2020-11-23 10:42 GMT   |   Update On 2020-11-23 10:42 GMT
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரித்தது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று புதன்கிழமை என்பதால் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வந்தனர். இதன் காரணமாக கடந்த வாரத்தை விட வாழைத்தார் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக செவ்வாழை ரூ.1200 வரை ஏலம் போனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

வழக்கமாக பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்து வாழைத்தார் ஏலத்திற்கு கொண்டு வரப்படும். கொரோனா பாதிப்பிற்கு பிறகு வெளிமாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வருவதில்லை. இதற்கிடையில் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் மட்டும் கொண்டு வரப்படும் வாழைத்தார் தேவைக்கு அதிகமாக உள்ளது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வாழைத்தார் இறக்குவதில்லை.

கடந்த வாரத்தை விட வாழைத்தார் வரத்தும் அதிகரித்து இருந்தது. பூவன்தார் ரூ.200 முதல் ரூ.600-க்கும், செவ்வாழை ரூ.300 முதல் ரூ.1200-க்கும், கற்பூரவள்ளி ரூ.150 முதல் ரூ.500-க்கும், நேந்திரம் கிலோ ரூ.18-க்கும், கதளி கிலோ ரூ.40-க்கும், ஏலம் போனது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News