செய்திகள்
கல்லணைக்கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை காணலாம்

தஞ்சை அருகே கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-04-08 04:56 GMT   |   Update On 2021-04-08 04:56 GMT
தஞ்சை அருகே கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருக்காட்டுப்பள்ளி:

தஞ்சை மாவட்டம் கல்லணையில் தொடங்கி தஞ்சை, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகள் பாசனம் பெறும் கால்வாய் கல்லணை கால்வாய். கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று அடைய வசதியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் நவீனப்படுத்துதல், சீரமைப்பு பணிகள் செய்ய பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது கல்லணை கால்வாயில் கல்லணையில் தொடங்கி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்வாயின் இரு கரைகளையும் கான்கிரீட் சாய் தளம் அமைப்பதற்கு வசதியாக சீரமைப்பு பணிகளும், தரை தளங்கள் அமைக்க சமப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வண்ணாரப்பேட்டை அருகில் ஒரு பழைய கீழ்போக்கு (சைபன்) பாலம் இடிக்கப்பட்டு முழுவதுமாக புதிதாக கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதைப்போல இந்த பகுதியில் கல்லணை கால்வாயில் தரைபகுதியில் சிமெண்டு் தளம் அமைக்கும் பணிகள் எந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் கான்கிரீட் தளங்களில் ஆங்காங்கு தண்ணீர் தரையிறங்கும் வகையில் சிறிய வகையிலான அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News