உள்ளூர் செய்திகள்
ரேசன் கடை முன்பு காத்திருந்த பொதுமக்கள்.

பொங்கல் பரிசு பொருட்கள் பெற முடியாமல் தவித்த பொதுமக்கள்

Published On 2022-01-12 10:36 GMT   |   Update On 2022-01-12 10:36 GMT
ரேசன் கடையில் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் எங்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது.
அவினாசி:

அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் சாலையில் உள்ள ரேசன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது இந்தநிலையில் நேற்று கடை திறக்காமல் பூட்டியிருந்ததால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடை முன் திரண்டு நின்றனர்.

இதுகுறித்து அங்கிருந்த பெண்கள் கூறுகையில்:

பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் வந்தோம். ஆனால் நேற்று முன்தினம் கடை திறக்கவில்லை. எனவே நேற்று மீண்டும் வந்தோம். அப்போதும் கடை பூட்டப்பட்டிருந்தது. 

2 நாட்களாக ரேசன்கடையில் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் எங்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

சம்பந்தப்பட்ட ரேசன்கடை பொருள் விற்பனையாளர்கள் கூறுகையில்:

கடை ஊழியர்கள் அனைவரும் வேர்ஹவுஸ் குடோனில் பொங்கல் பரிசு பொருட்கள் விடுபடாமல் அனைத்து பொருட்களும் சரிபார்த்து எடுத்துவரும் பணிகள் மேற்கொண்டதால் காலதாமதம் ஏற்பட்டது. இன்று வழக்கம்போல் அனைவருக்கும் விடுதல் இன்றி பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News