ஆன்மிகம்
மாரியம்மன்

நல்லிடை சேனைமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா

Published On 2021-09-06 06:00 GMT   |   Update On 2021-09-06 06:00 GMT
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ந ல்லிடைசேனை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்க்கும் திருவிழா நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நல்லிடைசேனை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்க்கும் திருவிழா நடந்தது. காலையில் மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனை செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பூ கரகம் ஜோடித்து முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்தனர். அப்போது பக்தர்கள் கூழை பாத்திரத்தில் ஊற்றி தலையில் சுமந்து வந்து கோவில் முன் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் ஊற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து பம்பை, உடுக்கை அடித்து குறி கேட்டனர். பின்னர் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. இரவில் மாரியம்மன் விதி உலா நடந்தது. அப்போது அம்மனுக்கு கற்பூர ஆராதனை செய்து, அன்னதானம் வழங்கினர்.
Tags:    

Similar News