உள்ளூர் செய்திகள்
ஏரி

தமிழகத்தில் 8 ஆயிரத்து 286 ஏரிகள் நிரம்பின

Published On 2021-12-01 23:38 GMT   |   Update On 2021-12-01 23:38 GMT
சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில், 363 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 138 ஏரிகளில், 8 ஆயிரத்து 286 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. 2 ஆயிரத்து 788 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டி.எம்.சி.யில் 210.445 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது 93.82 சதவீதமாகும்.

சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில், 363 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 198 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை 16 ஆயிரத்து 818 மருத்துவ முகாம்கள் மூலம் 5 லட்சத்து 30 ஆயிரத்து 574 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மழையால் ராமநாதபுரத்தில் ஒருவர் சுவர் இடிந்து விழுந்ததால் இறந்துள்ளார். அதேபோல், 436 கால்நடைகளும், 6 ஆயிரத்து 817 கோழிகளும் இறந்துள்ளன. 2 ஆயிரத்து 760 குடிசைகளும், 436 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

மேற்கண்ட தகவலை சென்னை மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News