தொழில்நுட்பச் செய்திகள்
வாட்ஸ்ஆப் பே

பணம் அனுப்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி

Published On 2022-04-14 11:04 GMT   |   Update On 2022-04-14 11:04 GMT
2020-ம் ஆண்டு வாட்ஸ் ஆப் பே இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட போது வெறும் 2 கோடி பயனர்களுக்கு மட்டுமே சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் பணம் பரிவர்த்தனை சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்தியாவில் முன்னணி யூபிஐ சேவைகளில் ஒன்றாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இருப்பினும் குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த வாட்ஸ்ஆப்பை 10 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் என்.பி.சி.ஐ அமைப்பு விரிவு செய்துள்ளது.

ஏற்கனவே 4 கோடி பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ்ஆப் பே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது, தற்போது கூடுதலாக 6 கோடி பயனர்களுக்கு விரிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு வாட்ஸ் ஆப் பே இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட போது வெறும் 2 கோடி பயனர்களுக்கு மட்டுமே சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 4 கோடியாக-ஆக உயர்ந்த நிலையில் தற்போது 10 கோடியாக அதிகரித்துள்ளது. விரைவில் 50 கோடியாக மாற்றும் அளவிற்கு வாட்ஸ்ஆப் சேவையை விரிவுப்படுத்துவோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News