ஆட்டோமொபைல்
கியா இவி6 டீசர்

கியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி டீசர் வெளியீடு

Published On 2021-03-09 08:09 GMT   |   Update On 2021-03-09 08:09 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யுவி பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.


கியா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் களமிறங்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் இவி6 என அழைக்கப்படுகிறது. இது இந்த மாதமே அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய கியா இவி6 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

புதிய எலெக்ட்ரிக் கார் டீசர்களின்படி இதன் முன்புறம் பிளாக்டு-அவுட் கிரில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், பொனெட் மத்தியில் கியா லோகோ பொருத்தப்பட்டு உள்ளது. உள்புறம் கூப் மாடல்களில் உள்ளதை போன்று ஸ்லோபிங் ரூப்லைன் உள்ளது. 



இந்த காரின் பின்புறத்தில் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இது ரூப்-மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், டக்டெயில் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. ஸ்ப்லிட் லைட் கிளஸ்டர்கள் பார்க்க சீப்பு போன்ற டிசைன் கொண்டுள்ளது. இது பொனெட் கீழ்பகுதி வரை நீள்கிறது.

கியா இவி6 மாடல் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இது அதிகபட்சம் 300 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 400 வோல்ட் மற்றும் 800 வோல்ட் சார்ஜிங் வழங்ப்படகிறது.
Tags:    

Similar News