வழிபாடு
திருப்பதி கோதண்டராமசாமி கோவில்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்

Published On 2022-03-29 04:51 GMT   |   Update On 2022-03-30 05:02 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. அதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அங்குரார்ப்பணம், சேனாதிபதி உற்சவம், சிறப்புப்பூஜைகள் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து 30-ந்தேதி ரிஷப லக்னத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் இரவு பெரிய சேஷ வாகனச் சேவை, 31-ந்தேதி காலை சிறிய சேஷ வாகனச் சேவை, இரவு ஹம்ச வாகனச் சேவை.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை சிம்ம வாகனச் சேவை, இரவு முத்துப்பந்தல் வாகனச் சேவை, 2-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனச் சேவை, யுகாதி ஆஸ்தானம், இரவு சர்வ பூபால வாகனச் சேவை.

3-ந்தேதி காலை பல்லக்கு சேவை, இரவு கருட சேவை, 4-ந்தேதி காலை அனுமந்த வாகனச் சேவை, மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகனச் சேவை, 5-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனச் சேவை, இரவு சந்திர பிரபை வாகனச் சேவை.

6-ந்தேதி காலை மரத்தேரோட்டம், இரவு குதிரை வாகனச் சேவை, 7-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு பிரம்மோற்சவ விழா கொடியிறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

மேற்கண்ட வாகனச் சேவை காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
Tags:    

Similar News