செய்திகள்
ஏற்றுமதி

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மொத்த ஏற்றுமதி, இறக்குமதி எவ்வளவு?: மத்திய அரசு வெளியீடு

Published On 2021-01-15 14:21 GMT   |   Update On 2021-01-15 14:21 GMT
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட 2020-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் 2019-ல் 27.11 பில்லியன் டாலருக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது 2020-ல் 27.15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பில் 0.14 சதவீதம் உயர்வாகும்.

2019-ல் இந்திய பண மதிப்பில் ரூ. 1,92,984.47 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2020 டிசம்பரில் ரூ. 1,99,770.58 கோடியாக அதிகரித்துள்ளது. இது 3.52 வளர்ச்சியாகும்.

2020 டிசம்பரில் 42.59 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 2019-ல் 39.59 பில்லியன் டாலராக இருந்தது. டாலர் அளவில் 7.56 சதவீதம் அதிகமாகும். இந்திய பண மதிப்பில் 2020-ல் ரூ. 3,13,407.53 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2019-ல் இது ரூ. 2,81,880.86 கோடியாக இருந்தது. இந்த வருடம் 11.18 சதவீதம் அதிகமாகும்.

2019-2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஒட்டுமொத்தமாக 364.18 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்திய பண மதிப்பில் ரூ. 25,62,539.91 கோடியாக இருக்கும்.

2020-21 ஏப்ரல்-டிசம்பரில் 258.27 பில்லியன் டாலராக இருக்கும். இந்திய பணமதிப்பில் ரூ. 19,22,790.49 கோடியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News